News April 24, 2024

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை!

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அரங்கத்தில், இன்று(ஏப்.23) இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட பெண் யார், என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 26, 2026

சென்னை: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

image

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் சென்னை சுகாதார அதிகாரியிடம்044-24321566 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

சென்னை: மெட்ரோ ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

image

குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று(ஜன. 26), ஞாயிறு அட்டவணையின்படி மெட்ரோ இரயில்கள் இயங்கும் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. காலை 5 மணி முதல் 12 வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியிலும், பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்.

News January 26, 2026

சென்னை: DATING செயலியால் மோகம்; விடிய விடிய அடி உதை

image

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வசிக்கும் 28 வயதான தனியார் கம்பெனி ஊழியர் ஒருவர் ‘GRINDER’ செயலி மூலம் பலரை தொடர்புகொண்டு தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். செயலில் கனமாப்பேட்டையில் பரிட்சயமான ஒருவரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் இரவு முழுவதும் விடிய விடிய அடித்து உதைத்து, நகை, G-PAY மூலம் ரூ.5,000த்தை அபகரித்துள்ளனர். புகாரின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!