News April 25, 2024
சென்ட்ரலில் தற்கொலை.. தொடரும் விசாரணை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் மாடியில் நேற்று(ஏப்.23) இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், தாயார் இறந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சரளாவுக்கும் அவரது கணவனுக்கும் இடையே பல நாட்கள் பிரச்னை இருந்து வந்ததாகவும் தகவல்.
Similar News
News January 25, 2026
சென்னை: விமானத்தில் நடுவானில் உயிரிழப்பு

பிஜியில் வசிக்கும் இந்தியரான சதாசிவன், தனது மனைவி நளினி ரஞ்சனி தேவியை சிகிச்சைக்காக சென்னை அழைத்து வர முடிவு செய்தார். இதற்காக இருவரும் அங்கிருந்து, மலேசியா வந்து, மலேசியன் ஏர்லைன் மூலம் சென்னை வந்தனர். அப்போதுநளினி ரஞ்சினிக்கு நடுவானில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை சென்னை விமான நிலைய போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரிக்கின்றனர்.
News January 25, 2026
சென்னை: வீட்டில் பாலியல் தொழில்!

சென்னை வளசரவாக்கத்தில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்த பகுதியில் சோதனை செய்த போது, வீடு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. அங்கு சென்று பாலியல் தொழில் நடத்திய காயத்ரி (31) என்பவரை கைது செய்த போலீசார், 4 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 25, 2026
சென்னை: இளைஞருக்கு அடி உதை!

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் (28). பெயிண்டர். இவர் நேற்று அந்த பகுதியில் நின்றபோது, அங்கு வந்த இமானுவேல் (26) மற்றும் ஏசையா என்ற சுதந்திரம் (25) ஆகிய இருவரும் வினோத்தை, முன்விரோதம் காரணமாக சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


