News December 11, 2025

சென்செக்ஸ் 427 புள்ளிகள் உயர்வு!

image

இந்திய பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. சென்செக்ஸ் 426.86 புள்ளிகள் உயர்ந்து 84,818 புள்ளிகளாக வர்த்தகமானது. US பெடரல் ரிசர்வ் அதன் வட்டி விகிதத்தை 25bps குறைத்த நிலையில், 3 நாள்களாக சரிவில் இருந்த நிப்டி இன்று 140.55 புள்ளிகள் உயர்ந்து 25,898 புள்ளிகளில் வர்த்தகமானது. குறிப்பாக ஆட்டோமொபைல்ஸ், வங்கிகள், IT, ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.

Similar News

News December 11, 2025

தமிழகம் 100/100.. SIR படிவங்கள் பதிவேற்றம்

image

SIR படிவங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை டிச.14-ம் தேதி வரை EC நீட்டித்துள்ளது. இந்நிலையில், TN-ல் 100% SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக EC அறிவித்துள்ளது. மொத்தம் 6.41 கோடி வாக்காளர்களுக்கு SIR படிவம் கொடுக்கப்பட்டதாகவும், பெரும்பாலானோர் படிவத்தை சமர்ப்பித்ததை தொடர்ந்து, விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக EC கூறியுள்ளது. இதையடுத்து டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.

News December 11, 2025

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. வந்தது HAPPY NEWS

image

பொங்கல் பரிசாக தலா ₹5,000 வழங்குமாறு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ₹3,000 வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜனவரி மாதம் முழுவதும் மக்கள் பெற்றுக் கொள்ள அவகாசம் வழங்கவிருப்பதாகவும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

News December 11, 2025

புகைப்படம் எடுக்க சிறந்த இடங்கள்

image

போட்டோ எடுப்பதற்காகவே புகழ்பெற்ற சில சுற்றுலா தலங்களை உங்களுக்கு தெரியுமா? உலகில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தாலும், சில இடங்கள் மட்டுமே போட்டோ கிளிக் செய்வதற்கு பிரபலமாக உள்ளன. இந்த இடங்கள், ஒவ்வொரு ஆண்டும் கோடிக் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன. அவை எந்தெந்த இடங்கள் என்பதை தெரிஞ்சுக்க, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!