News January 12, 2026
சென்சார் போர்டின் Brand Ambassador நான் தான்: ஜீவா

‘ஜன நாயகன்’ படம் சென்சார் பிரச்னையால் தள்ளிப்போனதால், ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் ஜன.15-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், புரோமோஷன் விழாவில் சென்சார் போர்டு தொடர்பாக ஜீவாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தான் நடித்த ஜிப்ஸி திரைப்படத்திற்கு 48 கட் கொடுத்ததாகவும், சென்சார் போர்டின் Brand Ambassador நான் தான் என கலகலப்பாக பதிலளித்தார்.
Similar News
News February 9, 2026
பிப்ரவரி 9: வரலாற்றில் இன்று

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்
“மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலைப் பாடி நடித்த மிகச்சிறந்த பாடகர் மதுரை சோமு பிறந்த தினம்
1984 – தமிழக பரதநாட்டியக் கலைஞர் தஞ்சாவூர் பாலசரஸ்வதி இறந்த தினம்
1996 – சிட்டி பாபு, தென்னிந்திய வீணைக் கலைஞர்
2001 – தமிழ் எழுத்தாளர் சாவி இறந்த தினம்
2012 – இந்திய இசைக்கலைஞர் எஸ். தட்சிணாமூர்த்தி
News February 9, 2026
சசிகலா கட்சியின் பெயர் என்னவாக இருக்கும்?

ஜெ., பிறந்த நாளான பிப்.24-ல் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை கூட்டி தனது பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ள சசிகலா, தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளாராம். கட்சியின் பெயர் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள அவர், கட்சியின் பெயரில் அதிமுக கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறாராம். மேலும், ஜெ., அண்ணா திமுக உள்ளிட்ட பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
News February 9, 2026
கூட்டணியை மறைமுகமாக உறுதி செய்த கிருஷ்ணசாமி

தமிழ்நாட்டில் ஊழல் மலிந்து கிடப்பதற்கு முக்கிய காரணம் ஒரு கட்சி (DMK, ADMK) என்ற ஆட்சி முறைதான் என்று கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். ‘கூட்டணி ஆட்சி’ என யார் சொல்கிறார்களே அவர்களுடன்தான் கூட்டணி பேசுவோம் என்று தெளிவுபடுத்திய அவர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுத் தொகுதியில் புதிய தமிழகம் போட்டியிடும் என்றார். அவரின் இந்த பேச்சு தவெகவுடன் கூட்டணி என்பதை மறைமுகமாக சொல்வதுபோல் அமைந்துள்ளது.


