News October 25, 2024

செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, செஞ்சி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகளை கொள்முதல் செய்ய வியாபாரிகள் குவிந்தனர். அதேபோல், கிராமப் பகுதியில் இருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த வாரவச் சந்தையில் சுமார் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. 1 ஆடு ரூ.5,000 – ரூ.35,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

Similar News

News February 2, 2026

விழுப்புரம்: கடைக்காரர் மாற்ற மறுக்கிறாரா?

image

விழுப்புரம் மக்களே.. கடைகளில் வாங்கிய பொருளை கடை உரிமையாளர் மாற்றித் தர மறுத்தாலோ, பணத்தை திருப்பித்தர மறுத்தாலோ கவலை வேண்டாம். வாங்கிய பொருளை 15 நாட்களுக்குள் சேதாரமின்றி இருந்தால் மாற்றவும், பணத்தை திரும்ப பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு. கள்ளக்குறிச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 04146-229884 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனே தீர்வு கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

விழுப்புரம்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

விழுப்புரம் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<> ‘Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

திண்டிவனத்தில் நிலத் தகராறு!

image

விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த ஊறல் கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம். இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது இந்த நிலத்தின் அருகே அவரது உறவினர் காளியின் நிலமும் உள்ளது. இந்த நிலங்களுக்கு இடையே இரண்டு சென்ட் பொது இடம் உள்ளது. இது தொடர்பாக இரு பிரிவினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சதாசிவத்தை தகாத வார்த்தை கூறியதாக தெய்வபாலன், சிவராஜ், கிருஷ்ணன், உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!