News October 20, 2024

செங்ல்பட்டில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

செங்ல்பட்டில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிழவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 10, 2025

புதிய தோற்றம் பெரும் செங்கல்பட்டு ரயில் நிலையம்

image

செங்கல்பட்டு ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 22.14 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்ததும், இந்த நிலையம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக மாறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே நிர்வாகம் தீபாவளிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது செங்கல்பட்டு பயணிகளுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தும்.

News July 10, 2025

செங்கல்பட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு 2/2

image

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க

News July 10, 2025

செங்கல்பட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு 1/1

image

ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டபட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT சர்வே குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வர். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (9445456000) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க <<17015679>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!