News April 27, 2025
செங்கோட்டை- மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்:16848) நாளை ஏப்.28 மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் வழியாக செல்லாது. மாறாக, அருப்புக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை 0வழியாக மாற்றுப்பாதையில் திருச்சிக்கு வந்து பின்னர் மயிலாடுதுறைக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *SHARE*
Similar News
News April 27, 2025
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று ஏப்.27 இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News April 27, 2025
வாகன விபத்து ஏற்படுத்திய சிறுமியின் தந்தை கைது

சிவகிரி பகுதியில் 15 வயது சிறுமி இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதை அடுத்து, இருசக்கர வாகனத்தை ஓட்ட அனுமதித்த சிறுமியின் தந்தையான சிவகிரி வடக்கு தெருவைச் சேர்ந்த குருசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
News April 27, 2025
குழந்தை வரம் வேண்டுமா? இந்தக் கோவிலுக்கு செல்லுங்கள்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் வேண்டிக்கொண்டு இங்குள்ள நதியில் நீராடினால் கரு உண்டாகும் என்பது நம்பிக்கை. அதனால்தான் இந்த நதிக்கு ‘கருப்பை நதி’ என்ற பெயர் வந்தது. அதுவே பின்நாளில் ‘கருப்பாநதி’ என்றானது. மேலும் பிரிந்த தம்பதியினர் இத்தலம் வந்து அர்த்தநாரீஸ்வரர் தரிசித்தால் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்வர் என்பது ஐதிகம்.