News September 6, 2024

செங்கோட்டை – மதுரை ரயில் வழக்கமாக இயக்கப்படும்

image

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் செங்கோட்டை – மதுரை ரயில் செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டையிலிருந்து 50 நிமிடங்கள் கால தாமதமாக மதியம் 1 மணிக்கு புறப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சுரங்கப்பாதையின் முக்கிய பணிகள் நிறைவுற்றதால் செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டை – மதுரை ரயில் வழக்கமான புறப்படும் நேரமான மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.

Similar News

News August 25, 2025

மதுரை – துபாய் விமானத்தில் திடீர் கோளாறு..!

image

துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் இயந்திர கோளாறு காரணமாக மதுரை விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் துபாய் செல்லவிருந்த 160-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில், மாலை 5 மணிக்கு விமானம் புறப்படும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 25, 2025

மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில்<> http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
<<17509957>>தொடர்ச்சி<<>>

News August 25, 2025

மதுரை மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

image

மதுரை மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம் முதல்வரின் முகவரி துறையில் <>(CM Cell)<<>> உடனே புகார் செய்யுங்கள். அல்லது 1100 என்ற உதவி எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இத்துறை செயல்படுவதால் உங்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!