News January 26, 2026

செங்கோட்டை – தாம்பரம் இன்று சிறப்பு ரயில் இயக்கம்

image

சனி, ஞாயிறு மற்றும் குடியரசு தின தொடர் விடுமுறையை முன்னிட்டு செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் எண் 06138 இன்று இயக்கப்படுகிறது. செங்கோட்டையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு நாளை 27ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை வழியாக தாம்பரம் செல்லும்.

Similar News

News February 14, 2026

தென்காசி: இனி சிலிண்டர் புக் பண்ண மிஸ்டு கால்…!

image

தென்காசி மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News February 14, 2026

தென்காசி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

சங்கரன்கோவிலில் கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி

image

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுதர்சன் (16) என்ற அரசு பள்ளி மாணவன் 10ம் வகுப்பு பயின்று வருகிறார், இவர் ராஜபாளையம் சாலையில் உள்ள அச்சம்பட்டி பகுதியில் கிணற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!