News August 8, 2025
செங்கோட்டை சென்னை சுதந்திர தின சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே தென்காசி வழியாக சுதந்திர தின விடுமுறை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை – செங்கோட்டை சிறப்பு ரயில் ரயில் ஆகஸ்ட் 14 வியாழன் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக மறுநாள் காலை 11:30 மணிக்கு செங்கோட்டையை அடையும். செங்கோட்டை – சென்னை: ஆகஸ்ட் 17 ஞாயிறு இரவு 7.45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னையை அடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Similar News
News August 7, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஆக.7) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும்போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
News August 7, 2025
கரடி தாக்கி காயமடைந்த பெண்களுக்கு நிவாரண தொகை

புளியங்குடியில் கரடி தாக்கி காயம் அடைந்த மூன்று பெண்களையும் தென்காசி வடக்கு மாவட்டம் திமுக சார்பில் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணத் தொகை வழங்கினார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார், நகர் மன்ற தலைவர் விஜயா சௌந்தர பாண்டியன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
News August 7, 2025
அஞ்சல்துறையை கண்டித்து பட்டினி போராட்டம்

சாம்பவர்வடகரையை சேர்ந்த ஒற்றைப்போராளி வைத்திலிங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: பன்னெடுங்காலமாய் பயன்பாட்டில் இருந்துவரும் பதிவுத்தபால் முறையை வரும் 1ம் தேதி முதல் ரத்து செய்வதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வாபஸ் பெறக்கோரி தென்காசி அஞ்சல் அலுவலகம் முன்பு 01.09.2025 அன்று 8 மணி முதல் 10 மணி நேரம் பட்டினிப் போராட்டத்தை நான் மேற்கொள்ள இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.