News September 12, 2025

செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இன்று இங்கு மட்டும் இயக்கம்

image

செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் – கரூர் இடையே மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஈரோடு – கரூர் இடையே பொறியியல் பணிகள் காரணமாக இந்த ரயில் பகுதி தூரம் ரத்து செய்யபட்டுள்ளது. மேலும், கொடைக்கானல் ரோட்டில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை- திண்டுக்கல் இடையே (செவ்வாய் தவிர) ஏற்கனவே ரத்து செய்யபட்டுள்ளது.

Similar News

News September 12, 2025

தென்காசி: வீடுதேடி குடிமைப் பொருள்கள் வழங்கல்

image

தென்காசி மாவட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடும்ப அட்டைதாரா்களுக்கு செப்.13, 14 ம் தேதிகளில் வீடுதேடி குடிமை பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தென்காசி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் நரசிம்மன் அறிவித்துள்ளாா். இனிவரும் மாதங்களிலும் மாதத்தின் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டப் பயனாளிகளுக்கு இல்லங்களுக்கே நேரில் வந்து குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யபட உள்ளது.

News September 12, 2025

தென்காசி: மூதாட்டியிடம் நகை திருட்டு

image

தென்காசி மாவட்டம், கடையத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி மகாலட்சுமி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒருவர் தலைவலி தைலம் தடவிவிடுவதாகக் கூறி, மூதாட்டி அணிந்திருந்த நகைகளைக் கழற்றி கீழே வைக்கச் சொல்லியிருக்கிறார். நகைகளைக் கழற்றி வைத்ததும், அவற்றை எடுத்துக்கொண்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கடையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 12, 2025

தென்காசி: ரூ.99 ஆயிரம் சம்பளத்தில் RBI வேலை

image

இந்திய ரிசர்வ் வங்கி (RBI)-ல் 120 கிரேட் பி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு முடித்த நபர்கள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம். சம்பளம் 55,200 – 99,750 வரை வழங்கபடுகிறது. செப்.30 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இங்கு <>க்ளிக் <<>>செய்து APPLY பண்ணி வேலைல சேருங்க.. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்யுங்க….

error: Content is protected !!