News March 8, 2026
செங்கோட்டையன் திமுகவில் இணைகிறாரா? தவெக பதிலடி!

செங்கோட்டையனை திமுகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக SM-ல் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இது தொடர்பாக அவரது தரப்பிடம் பேசினோம், இந்த தகவல் முற்றிலும் வதந்தி என மறுப்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக தவெக நிகழ்ச்சிகளை KAS புறக்கணித்து வருவதாக பேசப்பட்ட விவகாரத்திற்கும் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்று மறைமுகமாக பதிலளித்துள்ளதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது.
Similar News
News April 8, 2026
IPL: இன்றும் மழைக்கு வாய்ப்பு

IPL-ல், இன்று DC, GT அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதுகின்றன. ஏற்கெனவே KKR Vs PBKS, RR Vs MI அணிகள் இடையிலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4-6 மணி வரை 15% மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
News April 8, 2026
தவெகவுடன் கூட்டணி.. கடைசி நேரத்தில் பரபரப்பு

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி விரும்பியதாக ஆதவ் ஆர்ஜுனா முக்கிய தகவலை கூறியுள்ளார். ஆனால், ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் டெல்லி சென்று இந்த கூட்டணி அமையவிடாமல் தடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் உடன் கூட்டணி அமையாவிட்டாலும், அந்த ஓட்டுகள் தவெகவுக்கு கிடைத்துவிடும் என்றும் ஆதவ் பேசியுள்ளார். இதுபற்றி உங்க கருத்து?
News April 8, 2026
இந்தியர்கள் ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தல்

ஈரானில் அதிகரித்து வரும் போர் பதற்றம், பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. எந்தவித ஆலோசனையும் இன்றி சர்வதேச எல்லைகளுக்கு செல்லக்கூடாது என்றும், உதவிக்கு இந்த எண்களை +989128109115, +989128109109 +989128109102, +989932179359 தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


