News January 28, 2026

செங்கோட்டையன் கதறி அழுதார்: KC பழனிசாமி

image

அரசியலில் தவெகவை இயங்கவிடாமல் செய்துவிட்டதால்தான் TTV அக்கட்சிக்கு செல்லவில்லை என KC பழனிசாமி கூறியுள்ளார். ஜனநாயகன், CBI விவகாரங்களால் விஜய் வெளியில் வரவில்லை என்ற அவர், KAS தவெகவை நம்பி ஏமாந்துவிட்டதாகவும் பேசியுள்ளார். மேலும், ஆதவுக்கு கீழ்தான் தன்னுடைய இடம் என்பது தெரியவந்ததால் KAS கதறி அழவே ஆரம்பித்துவிட்டார் எனவும், இதனால்தான் யாரும் தவெகவுக்கு செல்லவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

Similar News

News February 4, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 601
▶குறள்:
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
▶பொருள்: ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

News February 4, 2026

ஜல்ஜீவன் திட்டம்.. நிதியை நிறுத்திய மத்திய அரசு

image

ஜல்ஜீவன் திட்டத்தில் மீதமுள்ள பணிகளுக்கான நிதியை நிறுத்துவதாக ராஜ்ய சபாவில் மத்திய அரசு கூறியுள்ளது. 2019-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு ₹2.09 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டதாகவும், 81.5% பணிகள் நிறைவுபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஜல்ஜீவன் திட்டப் பணிகள் முறையாக நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, மீதமுள்ள பணிகளுக்கான செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என கூறியுள்ளது.

News February 4, 2026

‘குட்டிக்கரணம் அடித்தாலும் திமுக ஆட்சிக்கு வராது’

image

தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே, தினமும் ஒரு வெற்று அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிடுவதாக அன்புமணி சாடியுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், கஞ்சா புழக்கம், மின் கட்டண உயர்வு என திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் தோல்வியே என்று அன்புமணி கூறியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளில் 13% மட்டுமே நிறைவேற்றியுள்ள திமுக, இம்முறை என்ன குட்டிக்கரணம் போட்டாலும் ஆட்சிக்கு வர முடியாது என விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!