News January 27, 2026

செங்கோட்டையன் அழைப்பை மறுக்க முடியவில்லை.. TTV

image

தான் தவெக கூட்டணிக்கு வர வேண்டுமென செங்கோட்டையன் விரும்பியதாக TTV தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், செங்கோட்டையன் சீனியர் என்பதால் அவரது கூட்டணி அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் தயங்கியதாகவும், அதனால் அவர் நம்பிக்கையுடன் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தேர்தலில் போட்டியிடவில்லை என்பது தனது சுய முடிவு என்றும், இதில் தனக்கு எந்த அழுத்தமும் யாரும் தரவில்லை என்றும் கூறினார்.

Similar News

News February 9, 2026

NDA கூட்டணியில் தேமுதிக.. முடிவை கூறிய L.முருகன்

image

தேமுதிகவை தங்களது கூட்டணியில் சேர்க்க திமுகவும், அதிமுகவும் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை கொடுக்கவே இருகட்சிகளும் யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக L முருகன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிக NDA கூட்டணிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News February 9, 2026

BREAKING: குருப் 2 தேர்வின் புதிய தேதி அறிவிப்பு

image

மையங்கள் ஒதுக்குவதில் எழுந்த குளறுபடி காரணமாக, நேற்று நடைபெற இருந்த TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மார்ச் 15-ம் தேதி தேர்வு நடைபெறும் என புதிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. வரும் 28-ம் தேதிக்குள் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் வழக்கமான முறைப்படி அதை டவுன்லோடு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 9, 2026

₹70,000 கோடிக்கு கஞ்சா விற்பனை: ஆதவ் அர்ஜுனா

image

கஞ்சா விற்பனை செய்யும் நெட்வொர்க்கை இதுவரை போலீசார் கைது செய்யாதது ஏன் என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார். 16 வயது பள்ளி மாணவி கஞ்சா விற்பனை செய்யும் நிலை தமிழகத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், கஞ்சா விற்பனை மட்டும் ₹60,000 – ₹70,000 கோடிக்கு நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார். மது மற்றும் கஞ்சா விற்பனை அதிகரிப்பதால்தான் பெண்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!