News November 3, 2025
செங்கோட்டையனை நீக்கியது வேதனை: கார்த்தி சிதம்பரம்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது வருத்தமளிப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே அதிமுக என்ற மாபெரும் கட்சி கீழ்நோக்கி செல்கிறது என்று விமர்சித்த அவர், மூத்த அரசியல் தலைவர், பல ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்தவரை நீக்கியது வேதனை அளிக்கிறது என்றார். மேலும், இது உள்கட்சி விவகாரம் என்பதால், இதற்கு மேல் பேச முடியாது எனவும் குறிப்பிட்டார்.
Similar News
News November 3, 2025
‘இரவு 12 மணி’: மம்தாவை வறுத்தெடுத்த பாஜக

மே.வங்க வன்கொடுமை சம்பவத்தின் போது, இரவு 8 மணிக்கு மேல் மாணவிகளை வெளியே அனுமதிக்க கூடாது என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த மம்தா பானர்ஜியை, பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. “யாரும் இரவில் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தியிருந்தீர்கள். ஆனால், நம் வீராங்கனைகள் இரவு 12 மணி வரை விளையாடினார்களே!” என்று X-ல் பதிவிட்டுள்ளது.
News November 3, 2025
புயல் சின்னம்.. மழை பொளந்து கட்டும்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், வட தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், நவ.9 வரை தமிழகத்தில் மழை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க!
News November 3, 2025
ராக்கெட் போல சீறும் பறவைகள் தெரியுமா?

வானத்தில் பறக்கும் பறவைகளின் வேகம் நம்மை ஆச்சரியப்படுத்தும். வானத்தில் சுதந்திரமாக பறக்கும் அவற்றின் திறன் நம்மை வியப்படைய செய்கிறது. இவ்வளவு வேகமா என்று வாயைப் பிளக்க வைக்கும் பறவைகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் எந்த பறவையுடன் பறக்க விரும்புகிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.


