News November 26, 2025
செங்கோட்டையனுக்கு தவெகவில் என்ன பொறுப்பு?

தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைப்புச் செயலாளர் என்பவர், ஒரு அரசியல் கட்சியின் அமைப்புகளை நிர்வகிக்கும் மற்றும் வலுப்படுத்தும் பணிகளை செய்யும் நபராக இருப்பார். இந்த பதவி, கட்சிகளின் பிரிவுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உறுதிசெய்து, அதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்.
Similar News
News April 14, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

ஏப்.16 உடன் 1-9 வகுப்புகளுக்கு தேர்வு முடிவடைகிறது. இதனிடையே, நாளை தேர்வு கிடையாது என்பதால், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்தல் பணியில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும், அவர்கள் நாளை வழக்கம்போல் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, இன்றும் மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர்.
News April 14, 2026
EB பில்லில் மாதம் ₹1,000 மிச்சம் பண்ணலாம்

நீங்கள் AC-யை சரியாக பயன்படுத்தினாலே, EB பில்லை குறைக்கலாம். AC-யை 18 C-ல் வைத்து தினம் 8 hrs பயன்படுத்தினால், ஒரு நாளைக்கு ₹96 (12 யூனிட் X ₹8), அதாவது மாதம் ₹2,880 செலவாகும். இதையே 24 C-ல் வைத்தால் ஒரு நாளைக்கு 8 யூனிட் தான் செலவாகும். அதன்படி (8 X ₹8 X 30 நாள்கள்) மாதத்துக்கு ₹1920 தான் செலவாகும். அதாவது, ₹2,880 -₹1920 = ₹960 மிச்சமாகும். <<17701011>>24 C-ல் வைப்பதுதான்<<>> உடல்நலத்துக்கும் நல்லதாகும்.
News April 14, 2026
1500 பேர் மரணம்… நீங்காத சோகம் REWIND

டைட்டானிக் படத்தின் சோக நிகழ்வு, உண்மையிலேயே 114 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்(ஏப்.14) நடந்தது. மூழ்காத கப்பல் என்று கூறப்பட்ட RMS Titanic, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் ஹார்பரிலிருந்து தன் முதல் பயணத்தை தொடங்கிய 4-வது நாள் இரவில், பெரும் பனிப்பாறை மோதியதில் நிலைக் குலைந்து மூழ்கியது. இதில் 1500 பேர் உயிரிழக்க, 700 பேர் மீட்கப்பட்டனர். ஆனால், படத்தில் வரும் ஜாக், ரோஸ் கேரக்டர் மட்டும் கற்பனையே.


