News December 21, 2025

செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி.. களமிறங்கும் KK செல்வம்

image

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு எதிராக அவரது அண்ணன் மகன் KK செல்வத்தை வைத்து EPS காய் நகர்த்தி வருகிறாராம். கோபி தொகுதியில் செங்கோட்டையனை தோற்கடிக்க வேண்டும் என அவருக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோபியில் அதிமுக சார்பில் போட்டியிட KK செல்வம் விருப்ப மனு அளித்துள்ளார். சொந்த அண்ணன் மகனே தனக்கு எதிராக நிற்பது செங்கோட்டையனுக்கு தலைவலியாக மாறியிருக்கிறதாம்.

Similar News

News December 28, 2025

‘என் சாவுக்கு இவர்கள் தான் காரணம்’

image

உ.பி., ஃபரூக்காபாத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞரின் உடலில் இருந்து உருக்கமான கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், ’போலீஸ் அளித்த தொல்லைகளால் மனமுடைந்து, வாழ்வதற்கான எண்ணத்தை இழந்துவிட்டேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். பழைய வழக்கு ஒன்றிற்காக போலீஸ் அவரது வீட்டில் அடிக்கடி சோதனை செய்த நிலையில், அந்த இளைஞர் மன உளைச்சலில் விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

News December 28, 2025

பதானின் டாப் 5 இந்திய வீரர்கள் யார் தெரியுமா?

image

2025-ன் டாப் 5 இந்திய வீரர்கள் பட்டியலில் முகமது சிராஜ்க்கு முதலிடம் கொடுத்துள்ளார் முன்னாள் வீரர் இர்பான் பதான். ENG உடனான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சிற்காக அவரை தேர்ந்தெடுத்துள்ளார். 2,3-வது இடங்களில் ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து சதம் அடித்து வரும் கோலி, ரோகித்துக்கு வழங்கியுள்ளார். 4வது இடத்தில் திலக் வர்மா, ஜெமிமாவை குறிப்பிட்டுள்ள அவர், 5வது வீரராக கில்லை தேர்வு செய்துள்ளார்.

News December 28, 2025

திட்டமிட்டு தமிழை அழிக்கும் செயல்: சீமான்

image

கீழடியை தமிழர் நாகரிகம் என்று சொல்வதில் என்ன பிரச்னை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதை திராவிட நாகரிகம் என சொல்வது ஏன் என கேட்ட அவர், 2,200 ஆண்டுகளுக்கு முன்பு கன்னடமும், தெலுங்கும் இருந்ததா எனவும் பேசியுள்ளார். மேலும், இவையெல்லாம் திட்டமிட்டு தமிழ் அடையாளத்தை, மொழியை அழிக்க நினைக்கும் செயல் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!