News December 28, 2025
செங்கை: வேன் மீது லாரி மோதி பயங்கர விபத்து!

தஞ்சாவூரைச் சேர்ந்த ஜேசுதாஸ், தனது உறவினர்கள் 18 பேருடன் வேனில் சென்னைக்குச் சுற்றுலா வந்தபோது, வண்டலூர் அருகே வல்லாஞ்சேரியில் பின்னால லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் கவிழ்ந்து, ஓட்டுநர் மற்றும் 6 குழந்தைகள் உட்பட 19 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ட்ரைவரை தேடி வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
செங்கை: ரேஷன் கார்டு, சிலிண்டர் குறித்து சந்தேகமா?

சிலிண்டர், ரேஷன் கார்டு, ரேஷன் கடை பொருட்கள் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரி எண்களை தொடர்பு கொள்ளுங்கள். செங்கல்பட்டு தாலுகா – 9445000172, தாம்பரம் – 9445000164, மதுராந்தகம் – 9445000174, செய்யூர் – 9445000175, திருக்கழுக்குன்றம் – 9445000173 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
News December 29, 2025
செங்கை: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mpari<
News December 29, 2025
செங்கை: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க


