News March 7, 2026
செங்கை: வாக்குறுதிகளை அறிவித்த விஜய்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தவெக மகளிர் தின விழாவில் மகளிருக்கான சிறப்பு அறிவிப்புகளை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். 1. அதன்படி மதிப்புமிகு மகளிர் திட்டம் என்ற பெயரில் 60 வயது வரை உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார். 2. குடும்பத்திற்கு அண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலசமாக வழங்கப்படும். <<19322190>>தொடர்ச்சி<<>>
Similar News
News April 5, 2026
செங்கை: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

செங்கல்பட்டு மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!
News April 5, 2026
செங்கை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

செங்கைமக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News April 5, 2026
கடற்கரை – செங்கல்பட்டு ரயில்கள் ரத்து

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே 8 புறநகர் மின்சார ரயில்கள் இன்று (ஏப்ரல்.5) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் 4 மின்சார ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்களது பயணத்தை அதற்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


