News December 29, 2025
செங்கை: ரேஸ் பந்தயத்ததால் நேர்ந்த சோகம்!

கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று காலை பந்தயத்தில் ஈடுபட்ட 15-க்கும் மேற்பட்ட இளைஞர்களில் ஒருவர், வடநெம்மேலி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானார். சுமார் 100 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அந்த வாலிபர், பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். போலீசார் வருவதைக் கண்டு மற்ற இளைஞர்கள் தப்பியோடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News February 6, 2026
செங்கை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News February 6, 2026
மாமல்லபுரத்தில் கிடைத்த பழமையான கல்

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மணல் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெரும் அளவிலான பழமையான கல் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தொல்லியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்தக் கல் அமைப்பு பழங்கால சிற்பக் கலை அல்லது கட்டுமானத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 6, 2026
செங்கல்பட்டு: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY!

செங்கல்பட்டு மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு க்ளிக் <


