News January 15, 2026

செங்கை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) செங்கை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

Similar News

News January 29, 2026

செங்கை: உயிருடன் எரிந்த ஆட்டோ ஓட்டுநர்!

image

பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த அஜித்குமாரின் மனைவி சங்கீதா குழந்தை இல்லாத காரணத்தால் பிரிந்து சென்றார். இதனால் அஜித்துக்குமார் விரக்தியில் இருந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் போனில் அழைத்தும் மனைவி வர மறுத்ததால், மனமுடைந்த அஜித்குமார் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக்கொண்டார். படுகாயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News January 29, 2026

செங்கை: 7வது மாடியிலிருந்து விழுந்து பரிதாப பலி!

image

வியாசர்பாடியைச் சேர்ந்த அனுஸ்ரீ (20), செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ஆந்திராவில் தனது தாத்தா இறந்த சோகத்தில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு தந்தையிடம் போனில் பேசிவிட்டு, தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கேளம்பாக்கம் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 29, 2026

கிளாம்பாக்கம் : தை பூசத்திற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தை பூசம், வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. ஜனவரி 30ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 360 பேருந்துகளும், ஜனவரி 31ஆம் தேதி 485 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

error: Content is protected !!