News December 31, 2025

செங்கை: முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

image

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஆறுமுகம் (61). தனது மனைவி கஸ்தூரியின் (54) நடத்தையில் சந்தேகமடைந்து, கடந்த 2021-ம் ஆண்டு கத்தியால் குத்திக் கொலை செய்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி, குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆறுமுகத்திற்கு ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Similar News

News December 31, 2025

மாமல்லபுரத்தில் இதற்கெல்லாம் தடை!

image

மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஓட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஏஎஸ்பி அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. இதில், டிச-31 மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களுக்குத் தடை, நள்ளிரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்குத் தடை மற்றும் கடற்கரைக்குச் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது. மேலும், தங்குபவர்களின் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

News December 31, 2025

செங்கை: பூட்டிய வீட்டில் மரமநபர்கள் கைவரிசை

image

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரைச் சேர்ந்த பால கணேஷ், கடந்த 25-ம் தேதி கேரளா சென்றார். நேற்று முன் தினம் அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 4.5 சவரன் தங்க நகை, 200 கிராம் வெள்ளி, ஏசி காப்பர் வயர் மற்றும் கேஸ் சிலிண்டர் திருடுபோயிருந்தது தெரிந்தது. இது குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

News December 31, 2025

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது

image

தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முதியவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான மைக்கேல் (55) என்பவரைத் தாக்கி அவரது செல்போனை பறித்த வழக்கில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் 4 பேரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!