News November 7, 2025
செங்கை: திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3.திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். யாராவது ஒருவருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 7, 2025
செங்கல்பட்டில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

செங்கல்பட்டு மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)
News November 7, 2025
செங்கல்பட்டு: ரேஷன் கார்டு இருக்கா? நாளை சூப்பர் வாய்ப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரகளுக்கான குடும்ப முகாம் நாளை (நவ.8) நடைபெற உள்ளது. வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடர்பாக குறைதீர் முகாம் செங்கல்பட்டு-தைலாவரம், செய்யூர்-வடப்பட்டினம், மதுராந்தகம்-பூதூர், திருக்கழுக்குன்றம்-வாயலூர், திருப்போரூர்-மேலையூர், வண்டலூர்-கீரப்பாக்கம் பகுதிகளில் நடைபெறுகிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல்/நீக்குதல், புதிய அட்டை போன்ற சேவைகளை பெறலாம். ஷேர்!
News November 7, 2025
செங்கல்பட்டு: சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளி) 340 பஸ்களும், நாளை மறுநாள் 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு நாளை மறுநாள் 4,982 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 5,041 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.


