News January 22, 2026
செங்கை: டிகிரி இருந்தால் 1லட்சம் சம்பளத்தில் வேலை!

செங்கை மக்களே.. CBI-வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும், மாத சம்பளம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கு <
Similar News
News January 29, 2026
செங்கை: 7வது மாடியிலிருந்து விழுந்து பரிதாப பலி!

வியாசர்பாடியைச் சேர்ந்த அனுஸ்ரீ (20), செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ஆந்திராவில் தனது தாத்தா இறந்த சோகத்தில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு தந்தையிடம் போனில் பேசிவிட்டு, தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கேளம்பாக்கம் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 29, 2026
கிளாம்பாக்கம் : தை பூசத்திற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தை பூசம், வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. ஜனவரி 30ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 360 பேருந்துகளும், ஜனவரி 31ஆம் தேதி 485 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
News January 29, 2026
செங்கல்பட்டு மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘கேஸ் நுகர்வோருக்கான குறைதீர்க்க கூட்டம் இன்று (ஜன- 29) மாலை 4.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கேஸ் சம்பந்தமான பிரச்சனைகள் குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களாக பெறப்பட்டு தீர்வு காணப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க


