News December 29, 2025
செங்கை: கீழே விழுந்த முதியவர் சம்பவ இடத்துலயே பலி!

செய்யூர் அருகே சாமந்திபுரம் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்க பெங்களூருவிலிருந்து வந்த சங்கர் (60), மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார். நல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகே சாலையில் குறுக்கே வந்த நாய் மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் பயணித்த ஸ்ரீராம் பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து செய்யூர் போலீசார் விசாரணை செய்கின்றனர்.
Similar News
News December 31, 2025
செங்கை: காவல் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

தமிழக காவல்துறையில் முக்கிய அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். தாம்பரம் மாநகர காவல் ஆணையராக A. அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்; அங்கு பணியாற்றிய அபின் தினேஷ் மோடக் சிஐடி அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டார். R. தினகரன் வண்டலூர் போலீஸ் அகாடமி ஏடிஜிபியாகவும், மகேஸ்வரி ஐஜியாகவும், செந்தில்குமார் ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News December 31, 2025
செங்கல்பட்டு: டூவீலர், கார் உள்ளதா?

செங்கல்பட்டு மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News December 31, 2025
செங்கல்பட்டு: 250 கோழிகள் இலவசம்!

செங்கல்பட்டு மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


