News January 3, 2026
செங்கை: கிரைண்டரில் விழுந்து வாலிபர் பலி!

ஊரப்பாக்கம், ரோகிணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது ககன் சிவனேசன்(32) தினமும் குடித்து விட்டு தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், போதையில் கிரைண்டரில் விழுந்த அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 28, 2026
வண்டலூர்: கோயில் குளத்தில் மிதந்த சடலம்!

வண்டலூர் கங்கை அம்மன் கோவில் குளத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், அவர் வண்டலூர் வாலாஜாபாத் சாலையைச் சேர்ந்த டிபன் கடை உரிமையாளர் லோகநாதன் (60) என்பது தெரிந்தது. உடல்நலக் குறைவால் மனமுடைந்த அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 28, 2026
செங்கை: 85 பேர் அதிரடி கைது!

மறைமலைநகரில் மூடப்பட்ட பிளாஸ்டிக் கோணிப்பை நிறுவன ஊழியர்கள், தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையைக் கோரி போராடி வந்தனர். இந்நிலையில், தொழிற்சாலை எந்திரங்களை நிர்வாகம் லாரிகளில் ஏற்றிச் செல்வதைக் கண்டு ஆத்திரமடைந்த 85 தொழிலாளர்கள் லாரியைச் சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களைக் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.பின்னர் மதியம் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
News January 28, 2026
குரோம்பேட்டை: ஓடும் காரில் பற்றி எரிந்த தீ

குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வகுமார் (40) என்பவர், நேற்று இரவு பணி முடிந்து பாரிவாக்கம் சிக்னல் அருகே காரில் சென்றுகொண்டிருந்தபோது, முன்பகுதியில் புகை வருவதைக் கண்டார். சுதாரித்துக்கொண்ட அவர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால், கார் தீப்பிடித்து எரிந்தபோதும் காயமின்றி உயிர் தப்பினார். விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


