News January 2, 2026
செங்கை: கத்தியுடன் ரீல்ஸ் செய்த சிறார்கள் கைது!

தாம்பரம் அருகே ரங்கநாதபுரம் குடியிருப்பு பகுதியில், கொலை முயற்சி வழக்கில் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு, பிணையில் வந்த 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நேற்று(ஜன.1) புத்தாண்டை அன்று கையில் பட்டாக் கத்தியுடன் நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளனர் இதனையடுத்து, தாம்பரம் போலீசார் வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 9, 2026
செங்கை: சிலிண்டர் மானியம் – ஒரே ஒரு SMS போதும்!

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News January 9, 2026
செங்கை: பொங்கல் பரிசில் பிரச்னையா? உடனே Call!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஜன-8) முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் ஏதேனும் பிரச்சனை என்றால் புகார் அளிக்க மாவட்டம் சார்பில் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கை 94983 41045, 94450 00172, மதுராந்தகம் – 94450 00174, திருக்கழுகுன்றம் 94450 00173, திருப்போரூா் – 94457 96413, வண்டலூா் -94983 41047, 7. வட்ட வழங்கல் அலுவலா் செய்யூா் – 94450 00175.
News January 9, 2026
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் நாளை ஜன.10 அன்று மிக கன மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன-11 அன்றும் மழை இருக்குமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நாளை முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.


