News January 15, 2026
செங்கை: இன்ஸ்டாகிராம் பிரபலம் அதிரடி கைது!

பெருங்களத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ என்பவருடன் பழகி வந்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பெற்ற சைஜூ, இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் சைஜூவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News January 27, 2026
செங்கை: கிராம ஊராட்சி செயலாளர் பலி!

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக அதே பகுதியை சேர்ந்த தசரதன் (35) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று (ஜன.26) தனது வயல்வெளியில் உள்ள மின் மோட்டாரில் மின் மோட்டார் இயக்க சுவிட்ச் ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார். மேலும், மேல்மருவத்தூர் போலீசார் இதனை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 27, 2026
செங்கை: காதலன் கண்முன்னே துடிதுடித்த பலி!

கள்ளக்குறிச்சி அதிமுக நிர்வாகி ராஜசேகரின் மகள் அனீஷா (25). இவர் செங்கல்பட்டு மாவட்டம் ஏகாட்டூரில் தங்கி சட்டம் படித்து வந்தார். இவர் தனது காதலன் நித்தியானந்தத்திடம் வீடியோ காலில் பேசியவாறே, தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், அனீஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 27, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

செங்கல்பட்டு நேற்று (ஜன.26) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.27) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


