News April 20, 2025
செங்கையில் 10 அவதாரங்களில் காட்சியளிக்கும் பெருமாள்

பெருமாளின் 10 அவதாரங்களை ஒருங்கிணைத்து ஒரே சிலையாக செங்கல்பட்டு திருவடி சூலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. பெருமாள் இங்கு மச்சம், கூர்மம், வராகம், பரசுராமர், ஸ்ரீ ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என அனைத்து அவதாரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூன்று முகங்கள், 20 கரங்களுடன் பிரம்மாண்டமாக சிலை காணப்படுகிறது. மூலவராக, திருப்பதியில் உள்ளது போன்று, வெங்கடேச பெருமாளாக எழுந்தருளியுள்ளார். ஷேர்
Similar News
News November 5, 2025
தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

தாம்பரம் இன்று (நவம்பர்-05) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 5, 2025
செங்கல்பட்டு மக்களே இதை கண்டிப்பாக பண்ணுங்க!

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள சிவன் கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
மாமல்லபுரம்: ‘விஜய்தான் முதல்வர் வேட்பாளர்’

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ‘த.வெ.க. முதல்வர் விஜய்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ADMK- TVK கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்ட்ட நிலையில், த.வெ.க.-வின் இந்த முடிவு முக்கியமானதாக கருதப்படுகிறது.


