News November 15, 2025
செங்குன்றம்: கஞ்சா கடத்திய மூவர் கைது!

செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், சோழவரம் மொண்டியம்மன் நகர் சோதனை சாவடியில் நேற்று(நவ.14) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூவரை பிடித்து, சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, சிவகங்கை அமரன் சூர்யா(28) துாத்துக்குடி பாலாஜி(26) ராமநாதபுரம் பூவலிங்கம்(29) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
Similar News
News November 15, 2025
திருவள்ளூர்: பெண் வெட்டிப் படுகொலை!

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனியில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி (55) என்ற பெண் நகைக்காக நேற்றிரவு(நவ.14) சில மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் காது, கழுத்தில் இருந்த நகைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 15, 2025
திருவள்ளூர்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

திருவள்ளூர் மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “<
News November 15, 2025
திருவள்ளூர்: CM கிட்ட பேசனுமா? CLICK NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., அரசின் திட்டங்கள் குறித்து கருத்து, புகார் தெரிவிப்பதற்கும், முதலமைச்சருடன் நேரடியாக வீடியோ, ஆடியோ மூலம் தொடர்புகொள்வதற்கும் உருவாக்கப்பட்ட திட்டமே, ‘நீங்கள் நலமா’. இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் கருத்துகளை CM-யிடம் தெரிவிக்க <


