News December 10, 2025

செங்கல்பட்டு: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

image

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11) கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 12, 2025

தாம்பரம் இரவு ரோந்து பணி செய்யும் காவலர் விவரம்

image

தாம்பரம் இன்று (டிசம்பர் – 12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 12, 2025

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு

image

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று இன்று (டிசம்பர்- 12) வெளியிட்டுள்ளது. சைபர் குற்றவாளிகள் போலியான ஷாப்பிங் இணையதளங்களை உருவாக்கி விலை உயர்ந்த பொருட்களை குறைவான விலைக்கு தருவது போன்ற கவர்ச்சிகரமான ஆஃபர்கள் மூலம் ஏமாற்றும் வேலையில் ஈடுபடுகின்றனர். எனவே நம்பகமான இணையதளங்களை மட்டும் பயன்படுத்த காவல்துறை அறிவித்துள்ளது.

News December 12, 2025

செங்கல்பட்டு: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!