News October 31, 2025

செங்கல்பட்டு: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு..

image

செங்கல்பட்டு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<> இந்த <<>>லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News November 1, 2025

மீண்டும் உற்பத்தியை துவங்கும் போர்ட் நிறுவனம்

image

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் உள்ள போர்டு தொழிற்சாலையில் மீண்டும் கார் எஞ்சின்கள் உற்பத்தியை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (அக்டோபர் 31) தலைமை செயலகத்தில் கையெழுத்தானது. ரூபாய் 3,250 கோடி மதிப்பீட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் இந்த நிறுவனத்தால் 1,000-திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (நவ.1) பள்ளிகள் செயல்படாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமை (நவ. 1) வேலை நாளாக இருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெறுவதால் நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க*

News October 31, 2025

செங்கல்பட்டு காவல் துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

image

செங்கல்பட்டு காவல் துறை இன்று (அக்.31) வாகன ஓட்டிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓரத்தில் நிறுத்த வேண்டாம், மேலும் இரவு நேரங்களில் வண்டிகளை பார்க் செய்யும் போது நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இது முக்கியமான எச்சரிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!