News September 16, 2025
செங்கல்பட்டு: 5 பேரை துரத்தி பிடித்த போலீஸ்

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் நிலைய சாலையில் இருந்து வெளியே வந்த நால்வர், போலீசாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர். நால்வரையும் மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை செய்த போது, அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் நெல்லையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News September 16, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 16, 2025
செங்கல்பட்டு: மழையால் விமான சேவை பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக தோகாவிலிருந்து 317 பயணிகளுடன் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த கத்தார் விமானம், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. மேலும் துபாய், லண்டன், சார்ஜா ஆகிய விமானங்கள் வானில் வட்டமடித்து பின்பு தரையிறங்கின. மீனம்பாக்கதில் இருந்து லண்டன், துபாய், தாய்லாந்து, கத்தார், மொரிசியஸ் உள்ளிட்ட 10 விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
News September 16, 2025
செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்களை கொண்ட இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.8,500- 23,800 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 25.09.2025 க்குள் அதிகாரப்பூர்வ மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.