News September 18, 2025
செங்கல்பட்டு: 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் விரைவில்.!

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் சுமார் 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க இடம் தேர்வாகியுள்ளது. இந்நகரில் வீட்டு வசதி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, தகவல் தொழில்நுட்ப பூங்கா, வேலைவாய்ப்புகள், வணிக வளாகம், வங்கிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை சர்வதேச தரத்தில் உருவாக்கப்படும். இந்நகரத்துடன் சென்னை போன்ற பெரு நகரங்களை இணைக்கும் வகையில் சாலை, ரயில் பாதை உள்ளிட்டவை உருவாக்கப்பட உள்ளது. SHARE
Similar News
News September 18, 2025
செங்கல்பட்டில் இன்று மழை வெளுக்கும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடலோர பகுதிகளில் மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளத்தக்க வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
செங்கல்பட்டு: கோழி திருடியதை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு

சூணாம்பேடு பகுதியைச் சேர்ந்த நாகப்பன்(46) கால்நடை மருத்துவமனை வளாகத்தில் வசித்து வருகிறார். அதே வளாகத்தில் வசித்து வரும் விஜய்(25) என்ற நரிக்குறவர், சூணாம்பேடு காலனி பகுதியில் இருந்து கோழியை திருடி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது விஜய், அருகே இருந்த அரிவாளால் நாகப்பனின் தலையில் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த நாகப்பன், செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News September 18, 2025
செங்கல்பட்டில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்.18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
1. தாம்பரம் – ஜெயகோபால் கரோடியா பள்ளி
2. திருப்போரூர் – எப்.பி.சி திருமண மண்டபம்
3. பரங்கி மலை – டபேலா ஹால்
4. காட்டாங்குளத்தூர் – எஸ்.எச்.ஜி கட்டடம்
5. சித்தாமூர் – தாத்தா ரெட்டைமலை சீனிவாச திருமண மண்டபம்
ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று மனுக்களை அளிக்கலாம்