News June 27, 2024

செங்கல்பட்டு: 11 பேருக்கு வீட்டு மனை பட்டா

image

செங்கல்பட்டு வட்டத்திற்குட்பட்ட 11 பேருக்கு உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, வட்டாட்சியர் பூங்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News

News December 25, 2025

செங்கல்பட்டு: போலீஸ் லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

செங்கல்பட்டு மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இது குறித்து குறித்து செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 25, 2025

செங்கல்பட்டு: பணியின் போது மயங்கி விழுந்து பலி!

image

திருப்போரூர் ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில், நாகராஜ் (50) என்ற தொழிலாளி பணியின்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். ரசாயன கசிவு காரணமாக அவர் இறந்தாரா அல்லது உடல்நலக் கோளாறா என்பது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டது.

News December 25, 2025

செங்கல்பட்டு: இதுவரை 24,906 பேர் பாதிப்பு!

image

தமிழகத்தில் செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. செங்கல்பட்டில் மட்டும் இந்த ஆண்டு 24,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்; இது கடந்த ஆண்டை விட (48 பேர்) குறைவு என்றாலும், பாதிப்பு தொடர்கிறது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!