News October 22, 2025
செங்கல்பட்டு: ரோடு சரியில்லையா? 72 மணிநேரத்தில் தீர்வு

செங்கல்பட்டு மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்
Similar News
News February 14, 2026
செங்கை: 50 பேர் அதிரடி கைது!

மாற்றுத்திறனாளிகளுக்கு மற்ற மாநிலங்களில் உதவித்தொகை யாக ரூ.6 ஆயிரம், கடுமையானவர்களுக்கு ரூ.10ஆயிரம், படுக்கையில் உள்ளவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதே போன்று தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று கூறி மதுராந்தகம் தேரடி தெருவில் மாற்றுத் திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் மாநிலம் தழுவிய 4வது நாளாக தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.
News February 14, 2026
மதுராந்தகம் அருகே பரபரப்பு!

மதுராந்தகம் அருகே கருங்குழியில், கேரம் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது புகழேந்தி(19) என்ற வாலிபர் 4நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். இதில் 3 குண்டுகள் வெடித்த நிலையில், நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மதுபோதையில் இருந்த புகழேந்தியை போலீசார் கைது செய்தனர். சமூக வலைதள வீடியோக்களைப் பார்த்து அவர் இந்த வெடிகுண்டுகளைத் தயாரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
News February 14, 2026
செங்கல்பட்டு இன்று இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

செங்கல்பட்டில் நேற்று (பிப்-13) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


