News August 24, 2025
செங்கல்பட்டு: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

செங்கல்பட்டு மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 24, 2025
தாம்பரம் பெண்ணிடம் ரூ.1.24 கோடி மோசடி

தடைசெய்யப்பட்ட பொருட்களை அனுப்பியதாகக் கூறி தாம்பரத்தைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ. 1.24 கோடியை மோசடி செய்த ஒடிசாவைச் சேர்ந்த தாவத் பிரவீன்குமார் (28), ஆகாஷ் மோகன்டி (26) ஆகிய இருவரைச் சென்னை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்வதாக மிரட்டி பணத்தைப் பறித்துள்ளனர். இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News August 24, 2025
செங்கல்பட்டு மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

செங்கல்பட்டு மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக விளங்கிவருகிறது. இம்மாவட்டத்தில் மொத்தமாக
▶️ 7 சட்டமன்ற தொகுதிகள்
▶️ 3 நாடாளுமன்ற தொகுதிகள்
▶️ 1 மாநகராட்சி
▶️ 4 நகராட்சி
▶️ 8 பேரூராட்சிகள்
▶️ 3 கோட்டங்கள்
▶️ 8 வட்டங்கள்
▶️ 636 வருவாய் கிராமங்கள்
▶️ 359 கிராம பஞ்சாயத்துகள்
▶️ 8 ஊராட்சி ஒன்றியங்கள்
ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
News August 24, 2025
வாக்குப்பதிவு இயந்திரங்களை அய்வு செய்த ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்க. இதில், வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கரன், நகராட்சி ஆணையர் ரமேஷ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்கிற சேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.