News December 18, 2025

செங்கல்பட்டு: ரயில் இடித்து முதியவர் பரிதாப பலி

image

காரைக்குடியிலிருந்து சென்னை நோக்கி வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, பரனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

Similar News

News December 20, 2025

செங்கல்பட்டு: விவசாயிகளுக்கு ரூ.31,000 மானியம்!

image

செங்கல்பட்டு மக்களே.. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.31,500 மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் நபர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க!

News December 20, 2025

செங்கல்பட்டு: போலீஸ் எங்களை மிரட்டுகிறது- செவிலியர்கள்

image

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் எம்.ஆர்.பி. செவிலியர்கள் 700-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கிளாம்பாக்கம் & ஊரப்பாக்கம் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால்,போராட்டத்தைத் தொடர்கின்றனர். மேலும் போலீசார் தங்களை மிரட்டுவதாகவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும் செவிலியர்கள் கூறுகின்றனர்.

News December 20, 2025

செங்கல்பட்டு: வேன்-பைக் மோதி 2 பேர் துடி துடித்து பலி!

image

ஆதனுர் கூடுவாஞ்சேரி சாலையில் நேற்று இரவு வேன் வேகமாய் சென்றது. அப்போது மாடு குறுக்கே வந்ததால் ட்ரைவர் வண்டிய திருப்ப முயன்றனர், அப்போது எதிர்ப்பாராத விதமாக எதிரே வந்த 2 பைக் மீது அடுத்தடுத்து வேன் மோதி பைக்கில் வந்த இருவரும் தூக்கி வேசப்பட்டனர். இந்த விபத்தில் ராஜ்குமார் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துலயே பலியானார்கள். மேலும் இருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ட்ரைவரை கைது செய்தனர்.

error: Content is protected !!