News June 5, 2024
செங்கல்பட்டு: ரயிலில் அடிபட்டு ராஜஸ்தான் இளைஞர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகே நேற்று(ஜூன் 4) காலை, தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி இறந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று உடலை கைப்பற்றிய போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்த நபர் ராஜஸ்தானை சேர்ந்த பாபு ராம்(25) என்பதும், கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.
Similar News
News September 27, 2025
செங்கல்பட்டு: பண்டைய பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் வள்ளிபுரம் பாலாற்றில், செய்யாறு கல்லூரி வரலாற்றுத் துறை விரிவுரையாளர் மதுரை வீரன், கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பண்டைய கால பீரங்கி குண்டுகள், கல் குண்டு, கைத்துப்பாக்கி ஈய குண்டு, போர் வீரரின் ஆடை பொத்தான் ஆகியவற்றை அவர் கண்டெடுத்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்புகள் அப்பகுதியின் வரலாற்றை அறிய உதவுகின்றன. இந்த தகவலை பிறரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News September 27, 2025
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில், 35,068 ஏக்கருக்கு நெல் நடவு செய்யப்பட்டது. தற்போது, ஒரு சில இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு கூடுதலாக ஆறு இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
News September 26, 2025
சிட்லபாக்கம் ஏரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தாம்பரம் அருகேயுள்ள சிட்லப்பாக்கம் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைபடுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் தி.சினேகா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவ்வப்போது ஏரியில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.