News May 14, 2024
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மே.14) பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 7 மணி வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
1,500 பழையமான கோயில்

காட்டாங்குளத்தூர் ரயில் நிலையம் அருகே 1500 ஆண்டுகளுக்கு முன் பல்லவர்களால் கட்ட பட்ட காளத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சிறப்பு என்னவென்றால் சர்ப்பதோஷம் இருப்பவர்கள் சனிக்கிழமையில் தோறும் நடைபெறும் சர்பதோஷ நிவர்தியில் கலந்து கொள்ள சர்ப்ப தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் நாகம் அடையாளம் காட்டிய தலங்களில் ஒன்றாக இந்த காளத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்து இருக்கிறது. ஷேர் பண்ணுங்க.
News July 10, 2025
பேருந்தில் மீதி சில்லறையை வாங்க வில்லையா? கவலை வேண்டாம்

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு (9445030523). எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!
News July 10, 2025
புதிய தோற்றம் பெரும் செங்கல்பட்டு ரயில் நிலையம்

செங்கல்பட்டு ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 22.14 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்ததும், இந்த நிலையம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக மாறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே நிர்வாகம் தீபாவளிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது செங்கல்பட்டு பயணிகளுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தும்.