News January 13, 2026

செங்கல்பட்டு மக்களே முற்றிலும் இலவசம்… செம வாய்ப்பு!

image

தமிழக அரசு சார்பில் ஏழை, விதவை, கணவன்&சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி, தையல் எந்திரம் & துணை சாதனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை (044-25264568) தொடர்பு கொள்ளுங்கள். செம திட்டம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 6, 2026

செங்கல்பட்டு: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY!

image

செங்கல்பட்டு மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு க்ளிக் <>செய்து <<>>புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News February 6, 2026

செங்கல்பட்டு: வீதிக்கு வந்த மாணவர்கள்

image

செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லுாரி மாணவர்கள், இலவச மடிக்கணினி வழங்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து ஆண்டு சட்டப் படிப்பு மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்படுவதாகவும், மூன்று ஆண்டு சட்டப் படிப்பு மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஒரே கல்லுாரியில் பாகுபாடு கூடாது என கூறி கோஷமிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

News February 6, 2026

செங்கல்பட்டில் கூண்டோடு கைது

image

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் செங்கல்பட்டில் நேற்று 3-ஆவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிறப்பு பென்சன், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து போராட்டம் நடத்தப்பட்டன. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!