News October 19, 2025
செங்கல்பட்டு மக்களே நாளை இதை மறவாதீர்!

தீபாவளி பண்டிகைக்கு குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
செங்கல்பட்டு: 29,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் B.Sc, சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ முடித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.29,735/வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ-12குள் இந்த <
News October 19, 2025
செங்கல்பட்டு: சொந்த ஊர் சென்றவர் பேருந்து மோதி பலி

சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த ஜீவிதா (22) ஒரகடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்து வந்தார். நேற்று (அக்.18) இவர் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல தனது நண்பர் சுபாஷ் என்பவருடன் டூவீலரில் சென்றார். அப்போது மதுராந்தகம் அடுத்த படாளம் பகுதியில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து மோதியதில் ஜீவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News October 19, 2025
செங்கல்பட்டில் 28 பட்டாசு கடைக்கு அனுமதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அனுமதி கோரி, 30க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். இந்த மனுக்களை பரிசீலனை செய்து, 28 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கி, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், நேற்று உத்தரவிட்டுள்ளார்.