News November 11, 2025
செங்கல்பட்டு: மகன் இறந்த துக்கத்தில் தாய், மகள் தற்கொலை

மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார், ஜெயலட்சுமி தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது மகன் புருஷோத்தமன் வீட்டின் அருகே உள்ள குளத்தில் மூழ்கி பலியானார். இந்நிலையில் தந்தை மகனின் அஸ்தியை கரைக்க வெளியே சென்றிருந்தபோது ஜெயலட்சுமி மற்றும் அவரது மகள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
Similar News
News December 10, 2025
செங்கல்பட்டு: மஞ்சள் பை விருதிற்கான அழைப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு, மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்து பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3பள்ளி கல்லுாரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக இணையதளம்,தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் விண்ணப்பங்களை ஜன-15க்குள் சமர்ப்பிக்கவும்.
News December 10, 2025
செங்கல்பட்டு: அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவு!

சரவம்பாக்கத்தைச் சேர்ந்த வாசுதேவன் 15ஆண்டுகளுக்கு முன் விபத்தில் பலியானார்.அவரது மனைவி பிரேமா தொடர்ந்த வழக்கில், குடும்பத்திற்கு ரூ.35.35 லட்சம் இழப்பீடு வழங்க மதுராந்தகம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காததால், விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற ஊழியர்கள் மதுராந்தகத்தில் நின்றிருந்த அந்தப் பேருந்தை ஜப்தி செய்தனர்.
News December 10, 2025
செங்கல்பட்டு: ட்ரைவர் மீது பஸ் மோதி விபத்து

சிங்கப்பெருமாள் கோயில் அருகே விஞ்சியம்பாக்கம் பகுதியை சேர்ந்த டிரைவரான கண்ணன் மல்ரேசாபுரம் அருகே பைக்கில் சாலையை கடக்க காத்திருந்தார். அப்போது செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற பேருந்து கண்ணன் பைக் மீது மோதியது. இதில் கண்ணன் படுகாயமடைந்தார். அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்கள் ட்ரைவரை சிறைபிடித்து போராட்டம் செய்தனர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


