News December 25, 2025
செங்கல்பட்டு: போலீஸ் லஞ்சம் கேட்டால் உடனே Call!

செங்கல்பட்டு மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இது குறித்து குறித்து செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News December 27, 2025
செங்கை: ஹோட்டல் மீது கார் மோதி பயங்கர விபத்து!

சென்னையிலிருந்து 35 வயதுள்ள நபர் ஒருவர் காரை அதிவேகத்தில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி நோக்கி ஓட்டி சென்றார். கார் திடீரென நிலைத்தடுமாறி மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக பெட்ரோல் நிலையம் அருகே ஓட்டல் சுவரில் மோதி நின்றது. இதில் கார் முன் பக்கம் பயங்கரமாய் உடைந்தது, மேலும் காரை ஓட்டியவரும் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துமனையில் சேர்த்த பின், போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 27, 2025
செங்கை: திருமண ஏக்கம்-பிறந்தநாள் அன்று தூக்கு!

சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் தீபிகா (28). திருமணத்திற்காக கடந்த 7 வருடங்களாக வீட்டில் வரன் பார்த்து வந்தனர். இருந்தும் வரன் அமையாமல் இருந்ததால் மன வருத்தத்தில் இருந்துள்ளார். நேற்று தனது பிறந்தநாள் அன்று கோயிலுக்கு செல்வதாக கூறி குளிக்க சென்றுள்ளார், நெடுநேரம் ஆகியும் கதவு திறக்காததால்,கதவை உடைத்தனர். அப்போது குளியல் அறையில் தூக்கில் தொங்கியபடி தீபிகா இறந்துள்ளார்.
News December 27, 2025
செங்கல்பட்டு பகுதியில் SIR சிறப்பு முகாம் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள S I R சிறப்பு முகாம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆட்டோ மூலம் அறிவிப்பு பிரச்சாரம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


