News October 5, 2025
செங்கல்பட்டு பெண்களே.. இலவச தையல் மிஷின் வேணுமா?

செங்கல்பட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் மிஷின் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.
Similar News
News October 5, 2025
செங்கல்பட்டு: ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா?

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 5, 2025
செங்கல்பட்டு: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News October 5, 2025
வண்டலூரில் மாயமான சிங்கம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ‘லயன் சபாரி’ காட்டுப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேரு என்ற புதிய ஆண் சிங்கம், விடப்பட்டது பொதுவாக, ‘லயன் சபாரி’ காட்டுப்பகுதியில் விடப்படும் சிங்கங்கள், மாலை நேரத்தில் தானாக தங்களது கூண்டிற்கு வந்துவிடும். ஆனால் இந்த புதிய சிங்கம் திடீரென மாயமானது. இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் சிங்கம் ‘லயன் சபாரி’ பகுதியில் சுற்றித்திரிவதை உறுதிப்படுத்தினர்.