News December 26, 2025
செங்கல்பட்டு: பெண்களுக்கு கொட்டி கிடக்கும் திட்டங்கள்!

தமிழக பெண்களுக்கென சிறப்பு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு மாதம் ரூ.1000, மறுமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000, ஏழை கைம்பெண்ணின் மகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000, ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000 மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு இங்கே <
Similar News
News December 30, 2025
செங்கை: கர்ப்பிணிகளுக்கு அனைத்தும் இலவசம்!

செங்கல்பட்டு மக்களே.. அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றேடுக்கும் தாய்மார்களுக்கு அனைத்து சலுகைகளும், மத்திய அரசின் JSSK திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
1) இலவச டெலிவரி (சிசேரியன் உட்பட)
2) இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள்
3) ஊட்டச்சத்து நிறைந்த இலவச உணவு
4) இலவச ஆம்புலன்ஸ் வசதி
5) இலவச தங்குமிடம்
இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 30, 2025
செங்கை: மின்சார ரயில் மோதி பரிதாப பலி!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்(30) காட்டாங்கொளத்தூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் மின்சார ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 30, 2025
செங்கை: இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய இருவர் கைது!

கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(22). மற்றும் 17 வயது சிறுவன். இருவரும் 21 வயது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும்17 வயது சிறுவனை கைது செய்தனர்.


