News May 14, 2024
செங்கல்பட்டு: பாம்பு கடித்து பலி
சித்தாமூர் அருகே அகத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனகோடி. நேற்று, வீட்டின் வெளியே அமர்ந்திருந்த போது, எதிர்பாராத விதமாக விஷப்பாம்பு தனகோடியின் வலது கையில் கடித்தது. உறவினர்கள் தனகோடியை மீட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, தனகோடியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, சித்தாமூர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News November 20, 2024
பண்டிகைகளை முன்னிட்டு ரயில் சேவை நீட்டிப்பு
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு, 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் பிப்.2ஆம் தேதி வரையிலும், வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் நெல்லை – சென்னை எழும்பூர் ரயில் சேவை பிப்.6ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News November 20, 2024
ரயில் சேவையில் மாற்றம்: நோட் பண்ணிக்கோங்க
சென்னை எழும்பூர் – விழுப்புரம் மாவட்டத்தின் சிங்கப்பெருமாள் கோயில் – செங்கல்பட்டு ரயில்வே நிலையங்கள் இடையிலான பகுதிகளில் இன்று (நவ.20) முதல் நவ.23ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பிற்பகல் 1.10 மணி முதல் பிற்பகல் 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News November 20, 2024
விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்ட அளவில் நடைபெற உள்ளது. வரும் 21ஆம் தேதி மதுராந்தகத்திலும், 22ஆம் தேதி செங்கல்பட்டிலும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க