News January 3, 2026

செங்கல்பட்டு பயணிகளின் கவனத்திற்கு!

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாகர்கோவில் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் ஜன. 11 & 18 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதேபோல் தாம்பரம் – குமரி இடையே வரும் ஜன. 12 & 19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு குமரி சென்றடையும்.

Similar News

News January 31, 2026

செங்கை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 31, 2026

செங்கை: ரத்த வெள்ளத்தில் துடித்த மாமியார்

image

சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ஏழுமலை (39), தனது மனைவி பிரிந்து சென்றதற்குக் காரணம் மாமியார் முனியம்மாள் (55) தான் என ஆத்திரமடைந்து, 2023-ல் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதுகுறித்த நேற்று வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி எழிலரசி, ஏழுமலைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

News January 31, 2026

தாம்பரத்தில் கொடூரத்தின் உச்சம்!

image

தாம்பரத்தில் பிரேம்குமார் என்பவர் வசித்து வந்தார். அவர் வீட்டின் கீழே இருந்த 3 வயது சிறுமி 15.07.22, பிரேம்குமாரின் வீட்டிற்கு சென்ற போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தாயார் புகாரின் பேரில் போலீசார் பிரேம்குமாரை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில், பிரேம்குமாருக்கு 20ஆண்டுகள் கடுங்காவல்,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ4 லட்சம் வழங்க உத்தரவு.

error: Content is protected !!