News August 22, 2025

செங்கல்பட்டு: பத்திரம் தொலைந்தால்… இதை செய்யுங்க

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க் மூலம்<<>> விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். இந்த இணையதளம் மூலம் பத்திரம் மட்டுமல்லாமல் நிலம் குறித்த பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் எளிதாக பெறலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News April 7, 2026

ஸ்தம்பித்த செங்கல்பட்டு!

image

செங்கல்பட்டில் வேட்புமனுத் தாக்கலின் போது நேற்று (ஏப்6)அரசியல் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் திரண்டதால் செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு, உள்ளிட்ட ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் வாகனங்கள் ஸ்தம்பித்தது. வேலைக்குச் செல்பவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் வெயிலில் பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் நிலைமையைச் சீர் செய்தனர்.

News April 7, 2026

செங்கல்பட்டில் 238 வேட்பு மனுக்கள் தாக்கல்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளில் மொத்தம் 238 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 117 பேர் மனு தாக்கல் செய்தனர்.
நாளை மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. மேலும், 9ம் தேதி வரை மனுக்கள் வாபஸ் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

News April 7, 2026

செங்கை: ரயில் முன் பாய்ந்த பெண்; 2 பேர் துடிதுடித்து பலி!

image

மறைமலைநகர் ரயில் நிலையம் வழியாக நேற்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலையத்தின் அருகே நின்றுக்கொண்டிருந்த 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஆண் பயணி ஒருவர் அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றார். இருவர் மீதும் ரயில் மோதியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

error: Content is protected !!