News October 15, 2025

செங்கல்பட்டு: பணம் திருடு போய்டுச்சா ? இத பண்ணுங்க

image

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, செங்கல்பட்டு எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம் . ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்கங்க.

Similar News

News October 15, 2025

காட்டாங்குளத்தூரில் இருந்து சிறப்பு ரயில்கள்!

image

தீபாவளி விடுமுறையை ஒட்டி வருகின்ற 22-ம் தேதி காட்டாங்குளத்தூரில் இருந்து அதிகாலை 4, 4.30, 5, 5.35, 6.39 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் தாம்பரத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்கள் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News October 15, 2025

தாம்பரம் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்!

image

தாம்பரம் – கன்னியாகுமரி இடையே வரும் அக்.16 மற்றும் 18-ந்தேதி இரவு 11.30 மணிக்கு (வண்டி எண்-06133) 14 முன்பதிவு இல்லா பெட்டிகள் மற்றும் 6 முன்பதிவு பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்கமாக அக்.17-ந்தேதி மாலை 4.35 மணிக்கு (வண்டி எண்-06134) கன்னியாகுமரி – செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான முன்பதிவு தொடங்க உள்ளது.

News October 15, 2025

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு மின்சார ரயில் இயக்கம்!

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் கூடுவாஞ்சேரி இடையே வரும் அக்டோபர் 17-ந்தேதி சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து இரவு 7:45, 7:58 மற்றும் 8:10 ஆகிய நேரங்களில் ரயில் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!